ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது ஆர் சி பி.
ஆனால் நேற்றைய போட்டியில் அந்த அணியின் ஆட்டம் சுணக்கமாகக் காணப்பட குஜராத் டைட்டன்ஸ் அணி எளிதாக வென்றது. முதலில் பேட் செய்த ஆர் சி பி அணியில் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி ஆட்டமிழக்க ஒரு கட்டத்த்தில் அந்த அணி 100 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. ஆனால் பின் வரிசையில் லிவிங்ஸ்டன் மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியால் கௌரவமான ஸ்கோராக 169 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 18 ஆவது ஓவரில் மிக எளிதாக வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. குஜராத் அணி சார்பாக 3 விக்கெட்கள் வீழ்த்திய சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.