ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி வந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
விராட் கோலி மற்றும் சால்ட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிலையில் இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்து விராட் கோலி தனது எண்ணிக்கையை தொடங்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புள்ளி பட்டியலை பொருத்தவரை பெங்களூர் அணி நான்கு புள்ளிகள் உடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் குஜராத் அணி இரண்டு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றாலும் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். இந்த நிலையில் இரு அணிகளின் வீரர்களின் நிலவரம் பின்வருமாறு:
குஜராத்: சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷாருக்கான், திவேத்தியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா
பெங்களூரு: சால்ட், விராத் கோலி, படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹாசில்வுட், யாஷ் தயால்,