Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் கைக்கு வந்த வெற்றியை அவர்களிடம் தாரை வார்த்துவிட்டோம்… கோலி வேதனை!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36வது போட்டி நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற நிலையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர் சி பி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொலக்த்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஜேசன் ராய் 56 ரன்களும், அணியின் கேப்டன் நிதிஷ் ராணா 48 ரன்களும் அதிரடியாக விளாசினர். ஆர் சி பி அணி போட்டியின் போது ஏராளமான கேட்ச்களை கோட்டை விட்டது கொல்கத்தா அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை அடிக்க ஏதுவாக அமைந்தது.

அதன் பின்னர் பேட் செய்த ஆர் சி பி அணியில் கோலி, தவிர வேறு யாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் தோல்வியைத் தழுவியது. போட்டி முடிந்ததும் பேசிய கோலி “நாங்கள் செய்த தவறுகளால், எங்கள் கையருகே வந்த வெற்றியை தாரைவார்த்துவிட்டோம். இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியான அணிதான்.  கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்கி கூடுதலாக 30 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம்.  ஒரு போட்டியில் வெற்றியடைந்தால், அடுத்த போட்டியில் தோல்வி அடைவது வாடிக்கையாகிவிட்டது. சொந்த மைதானத்திலேயே தோற்பதால் வெளி மைதானங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இனிவரும் போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments