Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

vinoth
சனி, 12 ஏப்ரல் 2025 (13:19 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி இமாலய வெற்றியைப் பெற்றது. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதை தொடர்ந்து,  103 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

இந்த இன்னிங்ஸில் தோனி உள்ளிட்ட பல வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிக எளிதாக பத்தாவது ஓவரிலேயே வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

இதனால் வேதனையில் இருக்கும் சி எஸ் கே அணி ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக கே கே ஆர் அணி தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் “சிஎஸ்கே அணி ஒரு சாம்பியன். அவர்கள் கண்டிப்பாக வலுவாக திரும்பி வருவார்கள்” என்று சொல்லி ரசிகர்களின் வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

சென்னை அணியின் பிரச்சனைகளுக்கு ஜடேஜாதான் ஒரே தீர்வு… ஹர்ஷா போக்ளோ சொல்லும் அறிவுரை!

எங்கள் பேட்ஸ்மேன்கள் எல்லாப் பந்துகளையும் சிக்ஸ் அடிக்கும் திறன் கொண்டவர்கள் இல்லை- ஓபனாக பேசிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments