Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி ஜெயிக்குற வரை ஸ்கூலுக்கு போகமாட்டேன்… இந்த பையனுக்காவது கப் அடிங்கப்பா!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (13:25 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கோப்பையை வெல்லாத ஒரு அணி என்றால் அது ஆர் சி பி தான். அந்த அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும், கோலி போன்ற சிறந்த வீரர்கள் கேப்டன்சி செய்தும், சில முறை இறுதிப் போட்டிக்கு சென்றும், கோப்பையை இன்னும் சுவைக்க முடியவில்லை. இதற்குக் காரணம் அந்த அணி வீரர்கள் சொதப்பி தள்ளுவதுதான் காரணம். நேற்று நடந்த போட்டியில் கூட வெற்றிப் பெற வேண்டிய போட்டியை சில கேட்ச்களை மிஸ் செய்ததன் மூலம் இழந்தார்கள்.

போட்டி முடிந்ததும் பேசிய கோலி “நாங்கள் செய்த தவறுகளால், எங்கள் கையருகே வந்த வெற்றியை தாரைவார்த்துவிட்டோம். இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியான அணிதான்.  கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்கி கூடுதலாக 30 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம்.  ஒரு போட்டியில் வெற்றியடைந்தால், அடுத்த போட்டியில் தோல்வி அடைவது வாடிக்கையாகிவிட்டது. சொந்த மைதானத்திலேயே தோற்பதால் வெளி மைதானங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இனிவரும் போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியைப் பார்க்க வந்த சிறுவன் கையில் வைத்திருந்த பதாகை கவனத்தை ஈர்த்தது. அதில் “ஆர் சி பி கோப்பையை வெல்லும் வரை நான் பள்ளியில் சேரப்போவதில்லை” என்று இருந்தது. அது சம்மந்தமான புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments