Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 ஃபார்மட்டுக்கு ‘குட்பை’ சொன்ன கேன் மாமா!

Advertiesment
கேன் வில்லியம்சன்
, திங்கள், 3 நவம்பர் 2025 (09:36 IST)
நியுசிலாந்து கிரிக்கெட் அணி உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர் கேன் வில்லியம்சன். அந்த அணிக்காக 15 ஆண்டுகளுக்கு மேல் விளையாடி வரும் அவர் அந்த அணியை கேப்டனாக வழிநடத்தியும் வருகிறார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் காயம் காரணமாக தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாட முடியாமல் அவதிபட்டு வருகிறார்.

இந்நிலையில் டி 20 வடிவக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் டி 20 போட்டிகளில் விளையாடி வரும் கேன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,575 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 18 அரை சதங்கள் அடங்கும். அவர் தலைமையில் நியுசிலாந்து அணி 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றது.

இந்நிலையில் அடுத்தடுத்து வரவுள்ள டி 20 உலகக் கோப்பைத் தொடர்களுக்கான அணியைக் கட்டமைக்க வழிவிடும் விதத்தில் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு 51 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!