நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன் பின்னர் ஆடவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் அவர் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதை அவர் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். 130 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை எட்டிய ராகுல், டேவிட் வார்னர் (135) மற்றும் விராட் கோலி (157) ஆகியோரின் சாதனைகளை முறியடித்து முதல் இடத்துக்கு சென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே மிகச்சிறப்பாக விளையாடி வரும் வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். பல அணிகளுக்காக இதுவரை அவர் விளையாடி வந்தாலும் இன்னும் அவரால் கோப்பையை ருசிக்க முடியவில்லை.