Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

Advertiesment
DJ Bravo and MS Dhoni

Prasanth Karthick

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (14:53 IST)

இன்று கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில் ப்ராவோவை பார்த்து தோனி ‘துரோகி’ என சொன்ன வீடியோ வைரலாகியுள்ளது.

 

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 போட்டிகளில் ருதுராஜ் கேப்டனாக இருந்த நிலையில் இன்றைய போட்டி முதலாக அணியை கேப்பிட்டன்சி செய்ய உள்ளார் தோனி.

 

இந்நிலையில் நேற்று முதலாக சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கொல்கத்தா அணியினர் பயிற்சி செய்து வருகிறார்கள். அப்போது கொல்கத்தா அணி பயிற்சியாளரான ட்வெய்ன் ப்ராவோ தோனியை சந்திக்க வந்தார். அப்போது தோனி “துரோகி வருகிறார் பார்” என ஜடேஜாவிடம் சொன்னார். ப்ராவோ சிரித்துக் கொண்டே ஜடேஜாவை கட்டியணைத்து பேசியதுடன், தோனியிடமும் மகிழ்வாக பேசிவிட்டு சென்றார்.

 

ட்வெய்ன் ப்ராவோ ஓய்வு பெறுவதற்கு முன்னதாக பல சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார், தோனியின் நெருக்கமான நண்பரும் கூட. ஆனால் தற்போது கொல்கத்தா அணி பயிற்சியாளராக உள்ளார். அதை வம்பு செய்வதற்காக தோனி விளையாட்டாக ‘துரோகி’ என அவரை குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் சிலர் ப்ராவோ சிஎஸ்கேவின் ரகசிய ஏஜெண்ட் என்றும், வடசென்னை பாணி செந்தில் கேங்கில் உள்ள அன்புதான் ப்ராவோ என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!