Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

Advertiesment
KL Rahul

Prasanth Karthick

, ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (10:27 IST)

நேற்று நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் டெல்லி அணி வீரர் கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்த நிலையில், சேஸிங் வந்த குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 204 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது.

 

டெல்லி அணி வெற்றியை இழந்திருந்தாலும் டெல்லிக்காக அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளார். நேற்று கே.எல்.ராகுல் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 28 ரன்களை குவித்திருந்தார். 

 

அதன்படி, இன்னிங்ஸ் அடிப்படையில் குறைந்த இன்னிங்ஸில் 200 சிக்ஸர்களை விளாசிய வீரராக சாதனை படைத்துள்ளார் கே.எல்.ராகுல். இந்த சாதனை மூலம் தோனி, கோலி, வார்னர் உள்ளிட்டவர்களின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

 

குறைந்த இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்தவர்களில் முதல் இடத்தில் க்ரிஸ் கெயில் (69 இன்னிங்ஸ்), இரண்டாவது இடத்தில் ஆண்ட்ரே ரஸல் (97 இன்னிங்ஸ்) உள்ள நிலையில் மூன்றாவது இடத்தை கே.எல்.ராகுல் (129 இன்னிங்ஸ்) பிடித்துள்ளார். இந்த பட்டியலில் எம்.எஸ்.தோனி (165 இன்னிங்ஸ்) 8வது இடத்திலும், விராட் கோலி (180 இன்னிங்ஸ்) 9வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!