முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியை 162 ரன்களில் கட்டுப்படுத்திய மும்பை இந்தியன்ஸ், சேஸிங்கில் 18 ஓவரில் 166 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் 11 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற இடத்தில் 16 வது ஓவரில் இருந்து மும்பை அணி ரன் கூட ஓடாமல் நின்று கொண்டே இருந்தனர்.
பந்துகள்தான் இருக்கிறதே, பவுண்டரியோ சிக்ஸரோ அடித்து முடிக்கலாம் என அவர்கள் காத்திருப்பதாக தெரிந்தது. அதேபோல 18.1வது பந்தில் ஒரு பவுண்டரியை அடித்து 166 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் சி எஸ் கே அணியை பத்தாவது இடத்திலேயே நிறுத்தி வைத்தனர். சன் ரைசர்ஸ் அணி ஒன்பதாவது இடத்துக்குக் கீழிறங்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் அணி பேட் செய்துகொண்டிருக்கும் போது மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அபிஷேக் ஷர்மாவிடம் சென்று அவர் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு தேடினார். சில போட்டிகளுக்கு முன்னால் அபிஷேக் ஷர்மா சதமடித்த பின்னர் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து ரசிகர்களை நோக்கிக் காட்டியது கவனம் பெற்றது. அதே போல இன்றையப் போட்டியிலும் எதாவது எழுதி வைத்திருக்கிறாரா என சோதனை செய்தது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றது.