நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் 9 ஆம் தேதி நடக்கிறது.
இந்த போட்டிதான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கும் பழைய உத்வேகத்தில் இல்லை. அவரால் அதிகப் பந்துகள் எதிர்கொண்டு களத்தில் அதிக நேரம் விளையாட முடியவில்லை. அதன் காரணமாகவே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து ஆட்டமிழந்து வருகிறார்.