நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியுசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 362 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேன் வில்லியம்ஸன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம அடித்தனர்.
இதையடுத்து 363 என்ற இமாலய இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 312 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 67 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தும் மற்ற வீரர்களின் உதவி இல்லாததால் தென்னாப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது.