இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக இருக்கும் பும்ராவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது.
ஆனால் முதல் போட்டியை ஏற்கனவே தோற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் பும்ரா இல்லாவிட்டால் நிச்சயம் தோல்விதான் கிடைக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பும்ரா விளையாடுவது பற்றி பேசியுள்ளார்.
அதில் “பும்ரா உடல் தகுதியோடு விளையாடுவதற்குத் தகுதியாக உள்ளார். ஆனால் அவர் ஆடும் லெவனில் இருப்பாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இந்திய அணியில் கண்டிப்பாக இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். ஆனால் அது யார் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.