Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

Advertiesment
Pro Kabaddi League

Siva

, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (07:50 IST)
புரோ கபடி லீக் சீசன் 12-க்கு, தமிழ் தலைவாஸ் அணி புதிய பலத்துடன் தயாராகி வருகிறது. புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், இந்த முறை முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் களம் காணுகிறது.
 
கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டங்களில் 8-ல் மட்டுமே வெற்றி பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டுமே ஒருமுறை பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுரேஷ் குமார் உதவி பயிற்சியாளராக இருப்பார்.
 
பி.கே.எல் ஏலத்திற்கு முன், அணி தனது முக்கியமான வீரர்களை தக்கவைத்து கொண்டது. மேலும், 4.973 கோடி ரூபாய்க்கு ஐந்து புதிய வீரர்களை வாங்கியுள்ளது. இம்முறை அணியின் ரைடிங் பிரிவு பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது. நட்சத்திர ரைடரான அர்ஜுன் தேஸ்வால் 1.4 கோடி ரூபாய்க்கு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
பவன் செஹ்ராவத், மோயின் ஷஃபாகி, நரேந்தர் கண்டோலா, விசால் சஹால், தீரஜ் ரவீந்திர, யோகேஷ் யாதவ், அபிராஜ் மனோஜ் பவார், ரோஹித் பெனிவால் ஆகியோர் அணியின் தாக்குதல் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
 
கேப்டன் சாகர் ராதே, நிதேஷ் குமார், அலிரேசா, மொஹித், சுரேஷ் ஜாதவ் ஆகியோர் அணியின் பாதுகாப்புப் பிரிவில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். அநூஜ் கவாடே மற்றும் ஆஷிஷ் ஆகியோர் கவர் வீராக உள்ளனர்.
 
புதிய பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன், பி.கே.எல் வரலாற்றில் மிகச்சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர். அவரது தலைமையில், இந்த சீசனில் நிச்சயம் முதல் கோப்பையை வெல்வதே அணியின் முக்கிய இலக்காகும். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?