Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

Advertiesment
ஆசியக் கோப்பை 2025

vinoth

, புதன், 20 ஆகஸ்ட் 2025 (08:44 IST)
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் சக அணிகளோடு தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.

பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் போன்றவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக டி 20 உள்ளிட்ட போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர்தான் காரணம் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் செயல்பட, ஆலோசகராக கம்பீர் இருந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் இப்போது ஸ்ரேயாஸ் மேல் கம்பீர் பாராமுகம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு..!