17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் பல விமர்சனங்கள் சர்ச்சைகள் எழுந்தன. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெறாதது கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி பலமிக்க அணியாகதான் உள்ளது.
இந்நிலையில் இன்று துபாயில் ஆசியக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இன்றிரவு ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்க் ஆகிய அணிகள் மோதும் முதல் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.