டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

vinoth
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (09:48 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் அந்த அணி டெவால்ட் பிரேவிஸை வாங்கியது குறித்துப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அவரது யுடியூப் சேனலில்  “சென்னை அணியின் வீரர் குர்ஜப்னீத் சிங் காயமடைந்த போது அவருக்குப் பதில் மாற்றுவீரராக சென்னை அணியால் வாங்கப்பட்ட டிவால்ட் பிரேவிஸ், பாதி தொடரில் அணியில் இணைய அதிக தொகையைத் தரக்கூட சென்னை அணி தயாராக இருந்தது” என்று பேசியிருந்தார்.

ஆனால் அஸ்வினின் இந்தக் கருத்தை மறுத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் “ஐபிஎல் விதிகளைப் பின்பற்றிதான் பிரேவிஸை அணியில் எடுத்ததாகக் கூறியுள்ளது”. இதனால் அஸ்வினுக்கும் சி எஸ் கே அணிக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் தற்போது தன்னுடையக் கருத்துக்கு விளக்கமளித்துள்ளது.

அதில் “நான் பிரேவிஸ் குறித்து பேசிய வீடியோவில் அவரது ஆட்டத்திறன் பற்றிதான் பேசினேன். சரியான நேரத்தில் சிஎஸ்கே அவரை ஏலத்தில் எடுத்தது என்றுதான் கூறியிருந்தேன். என் வீடியோவை முழுவதுமாகப் பார்த்தவர்கள் அதை சரியாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். பிரேவிஸை எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்தார்கள் என்று நான் பேசவில்லை. ஏனென்றால் எனக்கு அந்த விவரம் தெரியாது. நான் சொல்ல வந்தது என்னவென்றால் அவரை வாங்க மற்ற அணிகளும் ஆர்வமாக இருந்தார்கள் என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments