ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

vinoth
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (07:51 IST)
ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது, இதன் அடுத்த சீசன் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த தொடருக்கான் இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அந்த அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்பதுதான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஷுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்க மாற்று தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் அணியில் இருப்பார் என சொல்லப்படுகிறது. அதே போல முகமது சிராஜுக்கும் இந்திய அணியில் இடமிருக்காது என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments