Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்கப் போவதில்லை - குற்றம் சுமத்தும் டொனால்ட் டிரம்ப்

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (00:52 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 
"என்ன நடக்கிறது என நாம் பார்க்க வேண்டும்," என வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

 
தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

 
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர்.

 
புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் தோல்வியுற்றால் போட்டி வேட்பாளரான ஜோ பிடனிடம் அதிபருக்கான அதிகாரங்களை அமைதியான முறையில் வழங்குவாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

 
அதற்கு, "நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று," என டிரம்ப் தெரிவித்தார்.

 
2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்றதொரு பதிலைத்தான் அளித்திருந்தார் டிரம்ப். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்ட டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

அது அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என ஹிலாரி அப்போது விமர்சித்திருந்தார்.

 
இருப்பினும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று பதவியேற்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments