Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டுகள் கடந்து பியர் டின்னால் கிடைத்த நாய்!!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (14:06 IST)
காணாமல் போன ஒரு நாய் அதன் உரிமையாளருடன் இணைய காரணமாக ஆகி இருக்கிறது பியர். இது சம்பவமானது அமெரிக்காவில் நடந்திருக்கிறது. 
 
2017ஆம் ஆண்டு மே மாதம் மோனிகா மேத்திக்கு சொந்தமான 'ஹேசல்' எனும் நாய் காணாமல் போய் இருக்கிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. 
 
சில தினங்களுக்கு முன்பு ஒரு பியர் டின்னில் நாயின் முகம் அச்சடிக்கப்பட்டிருப்பதை சமூக ஊடகங்களில் மோனிகா பார்த்திருக்கிறார். அந்த நாயை பார்த்ததும் மோனிகாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
 
ஃபுளோரிடா மாகாணத்தில் மோனிகா வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 1600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பியர் தயாரிப்பு மையத்தில் 'டே டே' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த நாய் இருந்தது. பின்பு அவர்களை தொடர்பு கொண்டு நாயை திரும்ப பெற்றிருக்கிறார்.
 
அதெல்லாம் சரி, ஏன் அந்த பியர் நிறுவனம் நாயை முகத்தை பியர் டின்னில் அச்சடித்தது என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. ஆதரவற்ற நாய்களை யாராவது தத்தெடுப்பதற்காகதான் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments