Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 5 March 2025
webdunia

நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது? ரஜினியை அசிங்கப்படுத்திய நாஞ்சில்!

Advertiesment
நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது? ரஜினியை அசிங்கப்படுத்திய நாஞ்சில்!
, வியாழன், 23 ஜனவரி 2020 (12:31 IST)
நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என ரஜினியை விமர்சித்துள்ளார் நாஞ்சில் சம்பத். 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.    
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார். 
 
ரஜினியின் இந்த கருத்துக்கு விமர்சனங்களும் ஆதரவுகளும் கலவையாகவே கிடைத்து வருகின்றனர். ஆனால், யாரும் விமர்சிக்காத வகையில் நாஞ்சில் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, 
 
அவுட்லுக்குன்னு சொல்றாரு... ஹிந்து குழுமம்னு சொல்றாரு... அது சரி நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது! என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

80,000 கோடி கிராண்ட்டட்: ஜம்மு காஷ்மீருக்கு ஐஐடி, ஏய்ம்ஸ்!!