Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டாரோடு பயணித்தது தனி அனுபவம்! – மனம் திறக்கும் பியர் க்ரில்ஸ்

Advertiesment
சூப்பர் ஸ்டாரோடு பயணித்தது தனி அனுபவம்! – மனம் திறக்கும் பியர் க்ரில்ஸ்
, புதன், 29 ஜனவரி 2020 (12:55 IST)
நடிகர் ரஜினிகாந்துடன் மேற்கொண்ட காட்டு சாகச பயணம் குறித்து பெருமிதமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பியர் க்ரில்ஸ்.

உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான்.

அதற்கு பிறகு தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. காயம் ஏற்படவில்லை என்றும் ஷூட்டிங் நல்லபடியாக நடந்து முடிந்ததாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்துடன் காட்டில் பயணித்தது குறித்த தந்து அனுபவங்களை பியர் க்ரில்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ”பிரதமர் நரேந்திர மோடியுடன் செய்த பயணத்தை டிவி வரலாற்றிலேயே 3.6 பில்லியன் பேர் பார்த்திருந்தார்கள். எங்களது புதிய தொடருக்கு ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கேப்டன் மார்வெல் புகழ் ப்ரீ லார்சனோடு சாகச பயணம் செய்யவிருக்கிறார் பியர் க்ரில்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் தமிழர் எனும் நாங்கள் தீவிரவாதிகள் நாங்கள்... முழங்கிய சீமான்!