Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: "நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்"

Advertiesment
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
, சனி, 9 மே 2020 (22:44 IST)
நல்ல உடல் நலத்துடன் தான் இருப்பதாகவும், எனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

55 வயதான அமித்ஷாவின் உடல் நலம் குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், அமித்ஷா ட்விட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.
இந்தி மொழியில் அமித் ஷா பகிர்ந்துள்ள ட்வீட்டில், "உலக பெருந்தொற்றான கொரோனாவுக்கு எதிராக நமது நாடு போராடி கொண்டிருக்கிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதால், நானும் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இது போன்ற வதந்திகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியில் இருக்கட்டும் என நான் விட்டுவிட்டேன். எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஆனால், கடந்த இரு தினங்களாக எனது கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். அவர்களின் வருத்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன். இது போன்ற வதந்திகள் என்னை மேலும் வலுவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "இது போன்ற வதந்திகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தங்களது பணியில் கவனம் செலுத்த வேண்டும்," என்று தெரிவித்தார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின்நிறூவனம் சாதனை