#WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் கொரோனா பாதிப்பு 3 ஆம் கட்டத்தை எட்டிவிடக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உள்துரை அமைச்சரான அமித் ஷா இது குறித்து எதுவும் பேசாமல், காணாமல் போய் உள்ளார் என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
உள்துரை அமைச்சராக இருக்கும் அவர் இந்தியாவில் கொரோனாவின் நிலை என்ன? என்ன செய்ய வேண்டும் என ஏதேனும் மக்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரோ அமைதி காத்து வருகிறார் என அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.