Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

22 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா? பரிதாப நிலையில் காங்கிரஸ்!

Advertiesment
22 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா? பரிதாப நிலையில் காங்கிரஸ்!
, செவ்வாய், 10 மார்ச் 2020 (16:50 IST)
மத்திய பிரதேசத்தில் 19 பேர் ராஜினாமா செய்த நிலையில் மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது.  
 
காங்கிரஸின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியாவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர்.   
 
இந்த சம்பவம் கடந்த வாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இன்று ஜோதிராதித்யா சிந்தியா மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.   
 
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த 19 பேரும் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் என தெரிகிறது.   
 
இதனைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மேலும் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகிய காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 
 
இதனால் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மேலும் பாஜக ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா: கேரளாவில் 6 பேருக்கு, கர்நாடகத்தில் 4 பேருக்கு உறுதி