Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால முயற்சிகளில் வெற்றி கிட்டும்! - இன்றைய ராசி பலன்கள் (25.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும்.  இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்:
இன்று விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளைப் பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும்போல இன்று நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும் பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
மிதுனம்: 
இன்று அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும். பேச்சில் தடுமாற்றம், விரக்தி, ஏமாற்றம் வந்து போகும். யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

 
கடகம்:
இன்று முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்பவேண்டாம். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை முடிந்த வரை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 
சிம்மம்:
இன்று எவருக்கும் கடன் தரவேண்டாம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை. தீக்காயம், விஷபயம் ஏற்படும். உயர்கல்வி மற்றும் வெளியிடங்களில் படிக்கும் இந்த ராசி குழந்தைகளின் பெற்றோர் அடிக்கடி சந்தித்து குடும்ப சூழ்நிலை குறித்துச் சொல்லி, அவர்கள் தவறான வழிகளில் செல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

 
கன்னி:
இன்று எதிர்பார்த்த பணவரவுகள் குறித்த காலத்தில் கிடைக்கப் பெறாது. பெற்றோர் சம்மதிக்காத திருமணங்களை இந்த காலத்தில் தள்ளிப் போடுவது நல்லது. அரசியல்வாதிகள் தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்:
இன்று கொஞ்சம் சோதனையான நாள். குடும்பத்தில் கடன் சுமை அதிகமாகும். எது நடந்தாலும் பொறுமையுடன் கஷ்டங்களை எதிர்கொள்ளுங்கள். வெற்றியை எதிர்பார்க்கலாம். வாய்ப்புகள் கிட்டும்.  பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரம், தொழிற்சாலைகளில் நீடித்த அபிவிருத்தி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம்:
இன்று அரசு வழி உதவிகள் கிடைக்கும். மேன்மை பெறுவர். தடைபட்ட திருமணங்களை இந்த காலத்தில் நிறைவேற்ற உற்சாக வழி பிறக்கும். கொஞ்சம் பொறுமை காக்கவும். விரயச் செலவுகளை தவிர்க்க மாடிகளை கட்டுவதோ வீட்டின் உட்புறங்களை அழகுபடுத்துவதோ நல்லது. அளவான உணவும் எண்ணெய் பதார்த்தங்களை குறைப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 
தனுசு:
இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் இடையூறு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்:
இன்று உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகு கூடும். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

கும்பம்:
இன்று மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:
இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி.. மாஸ் காட்டும் தொண்டர்கள்..!