Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ராசிக்காரர்களுக்கு திருமண தடைகள் நீங்கும்! - இன்றைய ராசி பலன்கள் (24.02.2025)!

Prasanth Karthick
திங்கள், 24 பிப்ரவரி 2025 (06:02 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும்.  தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

 
ரிஷபம்:
இன்று இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும்.  தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும் உத்யோகத்தில் உயர்வும் உண்டாகும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

 
மிதுனம்: 
இன்று புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

 
கடகம்:
இன்று குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

 
சிம்மம்:
இன்று அலங்கார பதவிகள் வந்து சேரும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் மாட்டிக் கொள்ள நேரும். சொத்துப் பிரச்னைகள் இருந்தால் ஆரம்பத்தில் முன்கூட்டியே சரி செய்துவிடுங்கள். உங்களுடைய உதவிகள் தங்களை பிரபலமடையச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

 
கன்னி:
இன்று எவரைப் பற்றியும் எதிர்மறை கருத்துக்களை வெளியிடாதீர்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படலாம். தற்செயலான விபத்துக்களை சந்திக்க நேரும். உணவு விஷயத்தில் கடும் எச்சரிக்கை தேவை. இரவு, அதிகாலை நேரங்களில் பிரயாணங்களை தவிர்க்க வேண்டும். தக்க நேரத்தில் உணவருந்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 
துலாம்:
இன்று அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

 
விருச்சிகம்:
இன்று குலதெய்வம் எனக்கு என்ன செய்தது என்று அவ்வப்போது வெறுக்கத் தோன்றும். வீட்டிலுள்ள அம்மன் படங்களை வெளியேற்ற முயற்சிப்பீர்கள். காலம் தரும் சோதனையை ஏற்றுக்கொள்ள பழகுதல் நல்லது. ஞானிகளின் மேல் ஏற்படும் கரிசனத்தால் போலி வேடதாரிகளிடம் ஏமாறும் வாய்ப்பும் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 
தனுசு:
இன்று புதிய வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிட்டும். அதர்மமான காரியங்களில் ஈடுபட நேர்ந்தால் முழு மனதுடன் தவிர்த்து விடுங்கள். பலன்கள் முழுமையாக உங்களை வந்தடைய தெய்வ வழிபாடு செய்யுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறிவிட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 
மகரம்:
இன்று செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நினத்த காரியங்கள்  கிடைக்கப்பெறுவதால் மனதிற்கு நிம்மதி உண்டாகும். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

 
கும்பம்:
இன்று நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். சாப்பிட நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். மாமியார் வழியில் பிரச்சனைகள் வரும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலில் அபிவிருத்தி அடையலாம். பிள்ளைகள் வழியில் சந்தோசம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

 
மீனம்:
இன்று நல்ல முன்னேற்றம் உண்டு. சிக்கல்களைத் தீர்க்க புது யுக்திகளைக் கையாளுங்கள். குல தெய்வத்தையும், விநாயகரையும் வழிபட வெற்றிகள் கிட்டும். வீட்டை விட்டு கிளம்பும் முன் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாகன வசதிகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்