Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா விலகினால் போர் அபாயம்தான்: ஐநா எச்சரிக்கை!

Advertiesment
அமெரிக்கா விலகினால் போர் அபாயம்தான்: ஐநா எச்சரிக்கை!
, வெள்ளி, 4 மே 2018 (11:59 IST)
ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறு நடந்தால், போர் அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
 
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதனால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.
 
ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்று கூறி வருகிறார். தற்போது இந்த விவகாரம் பூதாகாரமாய் மாறி உள்ளது. 
 
இதுகுறித்து ஐநா சபையின் பொது செயலாளர் அந்தோனியா குத்தேரஸ் கூறியதாவது, ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் செய்துக் கொண்ட அணு ஆயுதம் ஒப்பந்தம் காக்கப்பட வேண்டும். 
 
ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தம் ஒரு ராஜதந்திர வெற்றியாகும். இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைலிருந்து விலக கூடாது. விலகினால் போர் மூளும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்