Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்

Advertiesment
இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்
, வெள்ளி, 4 மே 2018 (11:53 IST)
குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த வாலிபரும், அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
தர்மபுரி மாவடம் அரூர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்ணிற்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக்(24) என்கிற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, அவர்கள் இருவரும் சேலத்தின் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்துள்ளனர். 
 
இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலத்திற்கு வருமாறு மாலிக் கூறியுள்ளார். இதை நம்பி அப்பெண் சேலம் வந்துள்ளார். அப்போது குளிர்பானத்தில் மதுவை கலந்து அப்பெண்ணிற்கு மாலிக் கொடுத்துள்ளார். இதனால், அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்,சேலம் சத்திரம் பகுதியில் ஒரு லாட்ஜில் மாலிக் அறை எடுத்துள்ளார்.
 
அதன்பின், தனது நண்பர்கள் இருவர்களை செல்போன் மூலம் அந்த விடுதிக்கு வரவழைத்துள்ளர். அங்கு, அவர்கள் மூன்று பேரும் அப்பெண்ணை மாறி மாறி கற்பழித்துள்ளனர். அவருக்கு மயக்கம் தெளிந்த பிறகு, அவரை மிரட்டி விடிய விடிய கற்பழித்துள்ளனர். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். மேலும், அவரிடமிருந்து ஏ.டி.எம் கார்டை பிடிங்கி ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
 
இதையடுத்து அப்பெண், சேலம் மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு மாலிக் மற்றும் அவரின் நண்பர்களான நபீஷ்(29), ரஞ்சித் என்கிற விக்னேஷ்(25) ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் குடிக்க மாட்டேன் - தற்கொலை செய்த மாணவரின் தந்தை உருக்கம்