Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க ராணுவ விமான விபத்து - 9 பேர் பலி

Advertiesment
அமெரிக்க ராணுவ விமான விபத்து - 9 பேர் பலி
, வியாழன், 3 மே 2018 (11:02 IST)
அமெரிக்காவில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சமீபகாலமாக அமெரிக்காவில் தொடர்ந்து ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட ராணுவ விமான விபத்துகளில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் நேற்று அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜார்ஜியா நகரில் விமான பயிற்சியில் செய்து கொண்டிருந்தனர். 9 ராணுவ வீரர்கள் கொண்ட குழு ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் காலை 11:30 மணியளவில் சாவன்னா விமான நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்விமானம் விபத்துக்குள்ளானது.
webdunia
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை!