ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

Mahendran
சனி, 30 ஆகஸ்ட் 2025 (17:03 IST)
அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்பதை தடுக்கும் விதமாக, அமெரிக்க அரசு அவரது விசாவை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை, பாலஸ்தீன மக்களுக்கும், அந்நாட்டு அதிபருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில்,  பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இந்தியா, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில், பாலஸ்தீனம் ஐ.நா.வில் தனி நாடாக அங்கீகரிக்கப்படுவதற்கு மேலும் ஆதரவு திரட்டலாம் என்ற அச்சத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
இந்த விசா ரத்து சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது, பாலஸ்தீன அதிபரை ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசவிடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்த செயல் சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது, 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments