Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

Mahendran
திங்கள், 23 ஜூன் 2025 (10:57 IST)
ஈரானில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்களால் ஒரு நல்ல நாடாக அந்நாட்டை உருவாக்க முடியவில்லை, எனவே ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் நடைபெற கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பத்து நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென அமெரிக்கா இந்தப் போரில் களமிறங்கியது. ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கப் படைகள் தாக்கிய நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் இன்னும் பயங்கர விளைவுகளை சந்திக்கும் என்றும் எச்சரித்தது.
 
இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல. ஆனால், அதே நேரத்தில் தற்போதைய ஈரான் ஆட்சியால் நாட்டை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால் ஏன் ஆட்சி மாற்றம் நடைபெறக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இதனால் அமெரிக்க அதிபர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments