Publish Date: Mon, 23 Jun 2025 (10:01 IST)
Updated Date: Mon, 23 Jun 2025 (10:03 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பெரிய அளவில் சரிவில்லை. சில நாட்கள் மிக நல்ல முறையில் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் லாபமடைந்தார்கள்.
மேலும் இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியப் பங்குச்சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், திடீரென ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போது இந்தியப் பங்குச்சந்தையில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 880 புள்ளிகள் சரிந்து 81,527 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 262 புள்ளிகள் சரிந்து 24,852 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் நெஸ்ட்லே இந்தியா, ஓஎன்ஜிசி, ட்ரெண்ட் மற்றும் பெல் ஆகிய நிறுவனங்களை தவிர, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் மோசமாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.