Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவை தடுத்து நிறுத்திவிட்டேன்: டிரம்ப்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (20:03 IST)
வடகொரியா அணு ஆயுதங்கள் சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்காவை அச்சுறுத்தி வந்தது. ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வடகொரியாவை கடுமையாக எச்சரித்து வந்தது.
 
இதைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினார்கள். இதனிடையே வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்தது. சந்திப்பின்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றி உறுது கொண்டு வடகொரியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வடகொரிய அதிபரை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும் கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்கலை கைவிடும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சனைகள்தான் இதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
வடகொரியா அணு ஆயுதங்கள் சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன் என்று கூறினார். மேலும் வடகொரிய அதிபரை தான் மீண்டும் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments