Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் மேலும் ஒரு சீக்கியர் படுகொலை

அமெரிக்காவில் மேலும் ஒரு சீக்கியர் படுகொலை
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (12:14 IST)
அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சீக்கியர் ஒருவர் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த சீக்கியரான டெரியோக் சிங் என்பவரை அவரது கடையின் வைத்தி சில மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
webdunia
தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், டெரியோக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து தண்டனை வழங்குமாறு, சீக்கிய அமைப்பினர் வற்புறுத்தி உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.பி.சீட்டுக்கு ரூ. 5 கோடி - டிடிவி தினகரன் பக்கா பிளான்