Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊருக்கு கொடுத்த உபதேசத்தால் தனக்கே விழுந்த ஆப்பு! – 2 ஆயிரம் மெக்கின்சி ஊழியர்கள் பணிநீக்கம்?

Advertiesment
McKinsey
, புதன், 22 பிப்ரவரி 2023 (15:24 IST)
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கும் பிரபல மெக்கின்சி நிறுவனம் தனது நிறுவனத்திலிருந்து 2 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

சமீப காலமாக உலக பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு கார்ப்பரேட் மற்றும் ஐடி நிறுவனங்கள் பணியாளர்கள் பலரை பணிநீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட், கூகிள், அமேசான் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரபலமான மெக்கின்சி நிறுவனமும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசுகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியை இந்த மெக்கின்சி நிறுவனம் செய்து வருகிறது. சில நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி பரிந்துரைத்ததே மெக்கின்சி நிறுவனம்தான்.

தற்போது மெக்கின்சி நிறுவனமே தனது பணியாளர்களில் இருந்து 2 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தில் 1 ரூபாய் சில்லறை தராத வழக்கு.. ரூ.3000 நஷ்ட ஈடு அறிவித்து உத்தரவிட்ட நீதிமன்றம்..!