கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது வேலை நீக்கம் செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஜூம் இணைத்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜூம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் யுவான் என்பவர் சற்று முன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவது அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது