Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் தொடரும் பணி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

MK Stalin

Senthil Velan

, சனி, 7 செப்டம்பர் 2024 (11:24 IST)
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-Office வழியே பணி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
17 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பொறுப்பு முதலமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை. அமெரிக்கா சென்றாலும் கட்சியையும் ஆட்சியையும் கவனித்துக்கொண்டே தான் இருப்பேன் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
 
அதன்படி, தமிழ்நாட்டில் அரசு கோப்புகள், முதல்வரின் ஒப்புதலுக்காக தேங்கிவிடாமல் அமெரிக்காவில் இருந்தபடியே பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்வரின் முதன்மை தனி செயலர் உமாநாத் ஐ.ஏ.எஸ், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அரசு கோப்புகளை டேப் வழியாக காட்ட, அவர் அவற்றை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
அயலகத்தில் இருந்தாலும் பணி:
 
இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார். அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-Office வழியே பணி தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.
 
webdunia
AI மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்:
 
சாத்தியமான AI முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். AI இன் மாற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தைத் தழுவுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்.! மணிப்பூரில் பதற்றம்..!!