Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.! வினேஷ் போகத்தை களமிறக்கிய காங்கிரஸ்.!!

Vinesh Phogat

Senthil Velan

, சனி, 7 செப்டம்பர் 2024 (09:52 IST)
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில்,  மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது.  பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது.            
 
இதனிடையே ஹரியானாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் வீரர் பஜ்ரங் புனியா இருவரும் கடந்த புதன்கிழமை டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர்.    இதன் மூலம் இருவரும் காங்கிரஸில் இனிய உள்ளதாகவும், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.   
 
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் முன்னிலையில்  வினேஷ் போகத் மற்றும்  பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர்.

 
இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வழக்கு.! மேலும் இருவர் கைது..!!