லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (10:09 IST)
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஒரு விமானம் திடீரென விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த ஒருவரை தவிர அத்தனை பேரும் உயிரிழந்த நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் மீண்டும் லண்டனுக்கே திருப்பி விடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ்நிறுவனத்தின் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, நடுவானில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து, புறப்பட்ட 37 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் லண்டனுக்கே சென்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். 
 
சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments