Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்து 2 மணி நேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை; சிசிடிவி கேமராவில் சிக்கிய தந்தை

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (12:13 IST)
சீனாவில் பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமேயான குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா மூலம், இந்த கொடிய செயலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். போலீஸார் சிசிடிவி பதிவைக் கொண்டு ஒரு நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அது தன்னுடைய குழந்தை என்றும் குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாக குழந்தையின் தந்தை கூறினார்.
 
இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments