Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடித்து சிதறிய பியுகோ எரிமலை: 25 பேர் பரிதாப பலி!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (12:02 IST)
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 8 கி.மீ தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது.  
 
எரிமலை வெடிப்பி 25 பேர் பலியாகி உள்ளனர். இதில் குழந்தைகளும் அடக்கம். மேலும், பாதுகாப்பு கருதி எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,100 பேர் வெளியேறியுள்ளனர். 
 
இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் 15 கி.மீ வரை பரவ கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
பியூகோ என்றால் தீ என்று பொருள். இந்த எரிமலை அருகே, சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரம் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments