யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது - முதல்வர் திட்டவட்டம்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:52 IST)
இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. 
 
ஆனாலும், நீதிமன்றத்தை நாடி இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என செய்திகள் வெளிவந்தன. ஒருபுறம், சட்டசபையில் திமுக இந்த விவகாரத்தை தீவிரமாக கையிலெடுத்தது. 
 
இந்நிலையில் இன்றைய சட்டசபை விவாதத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவாகரம் குறித்து கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தை நாடி ஆலை திறக்கப்பட வாய்ப்பிருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் “ஆலை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனிமேல் யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.ஆலை மீண்டும் இயங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments