மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘தருல் குரான் இட்டிஃபா’ என்ற பள்ளி இயங்கிவருகிறது. மத போதனைப் பள்ளியான இதில் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ பின்பு கட்டடம் முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக பள்ளி சிறுவர்கள் யாரும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே 23 மாணவர்கள், 2 கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருதீன் ட்ராமன் உறுதி செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.