Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2020 - Live Updates!!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (10:57 IST)
2020- 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் குறித்த உடனடி அப்டேட்டுகள் உடனுக்குடன் இங்கு.... 
பட்ஜெட் 2020 தாக்கலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது.... 

# ஆதார் எண் அடிப்பையில் ஆன்லைனில் பான் கார்ட் உடனடியாக வழங்கப்படும். 
 
# ஆதார் எண் அடிப்படையில் எளிதான முறையில் பான் கார்ட் வழங்கப்படும். 
 
# புதிய வருமான வரியால் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரு ரூ.1.95 லட்சமாக குறைகிறது. 
 
# புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% என நிர்ணயம்.
 
# புதிய வருமான வரியால் ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரு ரூ.1.95 லட்சமாக குறைகிறது. 

# ரூ. 5 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு தணிக்கை இல்லை.
 
# புதியதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15% என நிர்ணயம்.
 
# குறைந்த விலை வீடுகளுக்கான மத்திய அரசின் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு.
 
# இதுவரை ரூ.25 கோடி வரையிலான ஆண்டு வர்த்தகத்தின் மீதான லாபத்திற்கு மட்டுமே 100% வரி விலக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

# ரூ.100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்வோருக்கு லாபத்தின் மீது 100% வரி விலக்கு. 
 
# 70 விதமான வரி கழிவுகள், விலக்குகள் ரத்து செய்யப்படுகின்றன
 
# வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 கோடி நஷ்டமாகும்.
 

# ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமான உள்ளவர்களுக்கு வரி விகிதம் 30% என்பதில் மாற்றமில்லை. 
 
# ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் இல்லை.
 
# ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைப்பு.
 
# ரூ.10 லட்சம் முதல் முதல் 12.5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆக குறைப்பு. 
 
# ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆக குறைப்பு.
 
# ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 10% ஆக குறைப்பு.
 
# பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.2.1 லட்சம் கோடி திரட்டப்படும். 

# 2020-21 ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10% இருக்கும், அரசின் நிதி பற்றாக்குறை 3.5% இருக்கும் என கணிப்பு. 
 
# எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு. 

# கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம்.
 
# மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
 
# பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.
 
# வங்கிகள் திவாலானல் வைப்புத்தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி தரப்படும். 
 
# வாடிக்கையாளர்களின் பணம் வங்கிகளில் பாதுகாப்படும். 
 
# வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு. 
 
# வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை தற்போது ரூ.1 லட்சமாக உள்ளது. 
 
# 2022ல் ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 
# வளர்ச்சி திட்டங்களுக்காக ஜம்மு-காஷ்மீருக்கு ரூ. 30,757
 
# லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5958 கோடி ஒதுக்கீடு.
 
# சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
# உலக நாடுகளுடன் இணைந்து நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்க திட்டம்.
 
# சிவில் தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வகை செய்யும் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
 
# மூத்த குடிமக்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ. 9,500 கோடி ஒதுக்கீடு.
 
# ராஞ்சியில் பழங்குடியினருக்கான அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
# அந்நிய செலவாணி வருவாய் 7.4% அதிகரித்து ரூ. 1.88 லட்சம் கோடியாக உள்ளது.
 
# சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்கள் மூடப்படும்.
 
# மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள நகரங்களில் காற்று மாசை குறைக்க ரூ. 4,400 கோடி ஒதுக்கீடு.
 
# சிறந்த நாடு குறித்து திருவள்ளுவர் கூறியதை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் உரை.
 
# பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து - எனும் திருக்குறளை கூறி நிர்மலா விளக்கம். 
 
# நாட்டை பாதுகாப்பதிலும் மோடி சிறப்பாக செயல்பட்டு திருக்குறளின் படி செயல்பட்டு வருகிறார்.
 
# தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு
 
# தேசிய ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்த சிறப்பு செயல்பாட்டுக் குழு அமைக்கப்படும்.
 
# தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 
# பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு.
 
# பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 
# நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த 9000 கிமீக்கு பொருளாதார பாதை அமைக்கப்படும்.
 
# மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு.
 
# நோயில்லாமல் வாழ பிரதமர் மோடி, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
# நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார்.
 
# விளைபொருள் பெருக்கம் என்பதற்குத்தான் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
 
# சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
# தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம்
 
# தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு அருங்காட்சியகம்.
 
# கலாச்சாரத்துறைக்கு ரூ.3150 கோடி ஒதுக்கீடு.
 
# ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாளங்களாக மேம்படுத்தப்படும்.
 
# 5 ஆண்டுகளில் 65 வது இடத்தில் இருந்து சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்திற்கு முன்னேற்றம். சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
 
# பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும்போது ‘நிர்பயா’ என எதிர்க்கட்சிகள் முழக்கம்.
 
# பெண் குழந்தைகளை பெற்றெடுப்போம். படிக்க வைப்போம் திட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
# குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8000 கோடி ஒதுக்கீடு.
 
# தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்.
 
# தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு.
 
# மனிதக் கழிவை மனிதனே அகற்றுவததை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 

# குழாவ் வழியே சமையல் எரிவாயு எடுத்துசெல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 
 
# ஒரு லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலமாக இணைக்க திட்டம்.
 
# பாரத் நெட் திட்டம் மூலம் 1 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிக் பைபர் இணையதள வசதி.
 
# நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் சேகரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.
 
# மின்சாரம் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு  
 
# மின்சார கணக்கெடுக்கும் மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றப்படும். 
 
# போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1.7 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. 
 
# 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். 
 
# பெங்களுருவில் ரூ. 18,600 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும்.
 
# ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.
 
# சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடங்கள் தேஜஸ் வகை ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.
 
# தனியார் - அரசு பங்களிப்புடன் 150 புதிய ரயில்களை இயக்க முடிவு.
 
# வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு. 
 
# நாடு முழுவதும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு.
 
# 2000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
 
# 2023ம் ஆண்டுக்குள் டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
 
# பொருளாதார ரீதியில் பலன் பெறும் வகையில் 6000 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றப்படும்.
 
#சென்னை - பெங்களூரூ இடையே வர்த்தக வழித்தடம் அமைக்க திட்டம். 
 
# தேசிய ஜவுளித் திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு.
 
# திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.3000 கோடி ஒதுக்கீடு.
 
# இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஒரு ஏற்றுமதி கேந்திரமாக வேண்டும் என்பது மோடியின் கனவு. 
 
# அரசு - தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்களாக மேம்படுத்தப்படும்.
 
# தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்த முதலீட்டளார்களுக்கு அனுமதி வழங்க பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்படும்.
 
# உள்நாட்டில் மின்னணு பொருட்களை ஊக்கப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். 
 
# இந்தியாவில் பயில்வோம் திட்டத்தில் 2026க்குள் நாட்டில் உள்ள பல்கலை.களில் 150 புதிய பாடப்பிரிவுகள் தொடங்க இலக்கு.
 
# சிறு ஏற்றுமதியாளர்களுக்கு உதவ நிர்விக் திட்டம். 
 
# மொபைல் போன் மற்றும் நின்னணு கருவிகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். 
 
# உத்தரபிரதேசத்தில் தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
 
# திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.3000 கோடி ஒதுக்கீடு.
 
# 112 மாவட்டங்களில் ஆயுஷ்மான் திட்டம் விரிவுப்படுத்தப்படும். 
 
# 2020-201 நிதி ஆண்டில் ரூ.99,300 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு. 
 
# வீடுகள் தோறும் குடிநீர் தரும் திட்டத்திற்கு ரூ. 3.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. 
 
# ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்.
 
# தேசிய காவல், தேசிய தடய அறிவியலுக்கு பல்கலைகழகம் அமைக்க நடவடிக்கை.  
 
# மாவட்டதோறும் தனியாருடன் இணைந்து மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 
 
# விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
 
# ஆயுஷ்மான் திட்டத்தின் படி அரசு - தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
 
# பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
 
# தூய்மை இந்தியா திட்டத்தற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு.
 
# ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500கோடி நிதி ஒதுக்கீடு.
 
# சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு. 
 
# 2025 ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளைத் தாக்கும், கால், வாய் தொடர்பான நோய்களை ஒழிக்க இலக்கு.
 
# 112 மாவட்டங்களில்’ஆயிஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள் வழங்கப்படும்.
 
# 2025 ஆன் ஆண்டுக்குள் காசநோயை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை.
 
# 2021க்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தியை அதிகரிக்க இலக்கு.
 
# 2022-2023க்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு.
 
# சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
 
# நபார்டு மூலமான மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
 
# 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு.
 
# விவசாய விளை பொருள்களை சேமிக்க கிராமங்கள் தோறும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
 
# பால், பழங்கள் காய்கறிகளை கொண்டு செல்ல தனி ரயில் இயக்கப்படும்.
 
# மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும்.
 
# விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
# விமான போக்குவரத்து துறை மூலமாக கிருஷி உடான் எனும் திட்டம் அமல்படுத்தப்படும்.
 
# கிராமப்புற பெண்களுக்காக தானிய லட்சுமி எனும் புதிய திட்டம்.
 
# சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திர்ங்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி.
 
# ஔவையாரின்  ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சு.
 
# மொத்தமாக 40 கோடி வர்த்தகர்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர்.
 
# இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.
 
# கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதன் மூலம் அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
 
# நேரடி மானியத் திட்டம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவியுள்ளது.
 
# சமூக கவனிப்பு, பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் இலக்கு என 3 தீம்களில் பட்ஜெட் தயாரிப்பு.
 
# அந்நிய நேரடி முதலீடு 284 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
# விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிகையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. 
 
# எளிமைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி நடைமுறை ஏப்ரல், 2020 முதல் அறிமுகப்படுத்தப்படும்.
 
# கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபியில் 52 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

# ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு குடும்பங்களில் 4% சேமிப்பு அதிகரித்துள்ளது. 
 
# ஜிஎஸ்டி காரணமாக நாட்டில் 60 லட்சம் பெர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்.
 
# சிறுபான்மையினர் பெண்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும்.
 
# இந்த பட்ஜெட் மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும், அவர்களது வாங்கும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
 
# துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன்.
 
# இந்திய பொருளாதாரத்துக்கான அடித்தலம் மிக வலுவாக உள்ளது.
 
# வருவாய் வற்றும் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
# அனைத்து துறையினரின் விருப்பங்கள், நம்பிக்கையை நிறைவெற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments