Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#Budget2019: மத்திய பட்ஜெட்.... லைவ் அப்டேஸ்!!

#Budget2019: மத்திய பட்ஜெட்.... லைவ் அப்டேஸ்!!
, வெள்ளி, 5 ஜூலை 2019 (11:30 IST)
முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாரமன், இன்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 
 
பட்ஜெட் அப்டேட்ஸ்: 

தங்கம் இறக்குமதி மீதான வரி 10%-த்தில் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு 
 
பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு 
 
ராணுவ தளவாட இறக்குமதிக்கு சுங்க வரி கிடையாது

ஜிஎஸ்டி வரி மேலும் எளிமைப்படுத்தப்படும் 
 
ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ்)
 
ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3% கூடுதல் வரி 

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் கிடையாது

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% 

பான் அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம் 
 
குறைந்தவிலை வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு 

5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை
 
ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25% வரி

கடனில் மின்சார வாகனம் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு
 
5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது 
 
வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியில் இருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்வு

பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 புதிய நாணயங்கள் அறிமுகம் 

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் 
 
இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபில் 5%-க்குள் உள்ளது 

5 ஆண்டில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு
 
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக நீடிக்கும் 

உலகத்தரத்தில் 74 இடங்களில் சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும் 
 
வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது 
 
பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும் 

முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி 
 
இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு ஆதார் கார்ட் வழங்கப்படும் 

உஜாலா திட்டத்தின் கீழ் இதுவரை 35 கோடி எல்.இ.டி பல்ப் வழங்கப்பட்டதால் ரூ.18,341 கோடி சேமிப்பு 
 
ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கப்படும் 

ஸ்டார் அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனியே தொலைக்காட்சி 
 
கழிவு சுத்திரகரிப்புக்காக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்

2019 அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனைத்து நகரங்களும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகரங்களாக மாற்றப்படும் 
 
என்சைக்ளோபீடியா போன்று காந்திபீடியா உருவாக்கப்படும். இதன் மூலம் காந்தியக் கொள்கைகள் இளைஞர்களிடம் பரப்பப்படும். 
 
உலகின் மிகச்சிறந்த கல்விமுறையாக நமது புதிய கல்விக்கொள்கை முறை இருக்கும் 
 
விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10,000 புதிய அமைப்புகள் உருவாக்கப்படும். 
 
தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

2024 ஆம் ஆண்டுகளில் அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஹர் கர் ஜல் திட்டம்
 
எண்ணெய் வித்துகள் உற்பத்தியிலும் தன்னிறைவு; ஆன்லைன் சந்தைகள் அமைத்து மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்
 
அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு

ஓய்வூதிய திட்டம் 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் பொருந்தும். 

75 ஆயிரம் தொழில் முனைவோருக்கு சிறப்பான பயிற்சி 

5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் 1,25,000 கிமீ-க்கு சாலை அமைக்கப்படும். 30,000 கிமீ பசுமை சாலை அமைக்கப்படும். 

7 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எருவாயு இணைப்பு வழங்கபப்ட்டுள்ளது
 
2020 ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு
 
சில்லறை மற்றும் வணிகம், ஊடகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகள் கிடைக்க ஊக்குவிக்கப்படும் 

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்தாண்டு ரூ.350 கோடி ஒதுக்கீடு 

சரக்கு போக்குவரத்திற்காக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது 

ஒரே நாடு, ஒரே மின்சார விநியோக திட்டம் கொண்டு வரப்படும். 

 
வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். 
 
2030 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்து, அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். 
 
உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
கடந்த 5 ஆண்டுகளில் 657 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 
அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது. இந்த திட்டத்திற்கு மிகுந்த ஊக்கம் அளிக்கப்படும் 
 
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்துள்ளனர். 
 
இந்தியப் பொருளாதாரம் 2.7 லட்சம் கோடி டாலராக உயரும் - மத்திய நிதியமைச்சர் 
 
டிஜிட்டல் இந்தியாவின் பலனை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்பிடமிருந்து எஜமானியை காப்பாற்றிய நாய்: பரிதாபமாக உயிரை விட்டது