Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபுவை மகிழ்வித்த லெஜண்ட் சரவணன் படக்குழுவினர்!

யோகி பாபுவை மகிழ்வித்த லெஜண்ட் சரவணன் படக்குழுவினர்!
, திங்கள், 26 ஜூலை 2021 (16:23 IST)
லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் யோகி பாபு பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணனுக்கு திடீரென ஹீரோ ஆசை ஏற்படவே தனது நிறுவன விளம்பரங்களில் தானே நடிக்க ஆரம்பித்தார். அதனால் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனாலும் விடாது எல்லா விளம்பரங்களிலும் அவரே நடித்தார். இதையடுத்து தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து என முன்னணிக் கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அண்ணாச்சி.

இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் யோகி பாபுவுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவருக்கு கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரவேற்பைப் பெற்ற அமலா பாலின் குடிஎடமைதே – ஆனால் எந்த படத்தின் காப்பி என்று கண்டுபிடித்த நெட்டிசன்கள்!