அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள குடியெமைதே சீரிஸ் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகை அமலாபால் தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வந்தாலும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் இப்போது அவர் வெப் தொடர்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய படங்களின் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் அவர் குடியெமைதே என்ற வெப் தொடரில் நடித்தார். இந்த சீரிஸின் கதையை தமிழ் உதவி இயக்குனர் ஒருவர் எழுதியுள்ளார். அந்த சீரிஸ் சில தினங்களுக்கு முன்னர் ஆஹா ஓடிடியில் ரிலிஸானது.
பரவலாக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த தொடர் டைம் லூப் எனப்படும் காலப்பயண அம்சத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டு வெளியான எ டே என்ற கொரிய படத்தின் காப்பி என்று அதற்குள் நெட்டிசன்கள் அலச ஆரம்பித்து விட்டனர்