Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலருக்கு உதவி செய்யாத நயன்தாரா? கடன் வாங்கும் விக்னேஷ் சிவன்!

காதலருக்கு உதவி செய்யாத நயன்தாரா? கடன் வாங்கும் விக்னேஷ் சிவன்!
, புதன், 9 செப்டம்பர் 2020 (16:45 IST)
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் நின்றுள்ள நிலையில் அதற்கு நயன்தாரா ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று. இந்த படத்தை அவரது வருங்கால கணவரான விக்னேஷ் சிவனின்  ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்த படத்துக்காக நெற்றிக்கண் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நயன்தாரா கவிதாலயா நிறுவனத்துக்கு நன்றி சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த படம் இப்போது பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாமல் நிற்கிறதாம். அதற்காக தான் அடுத்ததாக இயக்க இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் தயாரிப்பாளரிடம் இருந்து பணம் வாங்கி எடுத்து முடிக்க உள்ளாராம் விக்கி.

தன் காதலியிடமே கோடிக்கணக்கில் பணம் இருக்க, ஏன் வேறு தயாரிப்பாளரிடம் கடன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சொந்த வாழ்க்கை வேறு தொழில் வேறு என இருவருமே நினைத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனும் வழிக்கு வந்தார்…? ஓடிடியுடன் நடக்கும் பேரம்!