Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐயா படத்திற்காக அரசு பேருந்தில் சென்னை வந்த நயன்தாரா - சுவாரஸ்ய தகவல்!

Advertiesment
ஐயா படத்திற்காக அரசு பேருந்தில் சென்னை வந்த நயன்தாரா - சுவாரஸ்ய தகவல்!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:50 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது. தமிழ் சினிமாவில் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும் தான்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான  love action drama என்ற மலையாள படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தியான் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிவின்பாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு ஏதும் இல்லாத நயன்தாரா அண்மையில் ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானம் மூலம் தனது காதலருடன் கேரளாவிற்கு சென்றது பரவலாக பேசட்டது.

ஆனால், அவர் ஆரம்பகாலத்தில் ஐயா படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து தனது தாய் தந்தையை அழைத்துக்கொண்டு அரசு பேருந்தில் வந்துள்ளார். கோயம்பேடு வந்து இறங்கியதும் அவர்களை வரவேற்ற பிஆர்ஓ ஜான்சன் வடபழனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்துள்ளார். என்று பிரபல யூடியூப் விமர்சகர் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் இந்த வளர்ச்சியை அறிந்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரவணா ஸ்டோர் வாசல்ல நிக்குற பொம்ம மாதிரி இருக்கீங்க - அழகு யாஷிகாவிற்கு குவியும் லைக்ஸ்!